"INDIA கூட்டணி பாஜகவுக்கு நிச்சயம் சவாலாகவே இருக்கும்" - அமைச்சர் தர்மேந்திர பிரதான்

வரும் தேர்தலில் INDIA கூட்டணிக்கு உண்மையான சவாலாக பாஜக வந்திருப்பதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அமைச்சர் தர்மேந்திர பிரதான், “நாட்டிற்கு தொடர்ந்து சேவையாற்றுவதற்காக நரேந்திர மோடியை 3 ஆவது முறையாக பிரதமராக்குவதே கட்சியின் தற்போதைய செயல் திட்டம். எந்தத் தேர்தலையும் பாஜக சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது. INDIA கூட்டணியை உண்மையான சவாலாகவே பார்க்கிறோம்.

pm modi
pm modipt desk

வரும் தேர்தலை தீவிரமாக எடுத்துக்கொண்டு சாதாரண தொண்டர் முதல் உயர் மட்ட தலைவர்கள் வரை உழைத்து வருகிறோம். பிரதமர் மோடி எங்களை வழிநடத்தி வருகிறார்” என்றுள்ளார்.

மேலும் வரும் மக்களவைத் தேர்தலில் தனது சொந்த மாநிலமான ஒடிசாவிலிருந்து போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டுமென கட்சி தலைமையை அவர் கேட்டுக்கொண்டார். தற்போது இவர் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com