\
டிஜிபி நியமனம்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

டிஜிபி நியமனம்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

டிஜிபி நியமனம்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Published on

டிஜிபிகளை அந்தந்த மாநில அரசுகள் நேரடியாக நியமிக்க கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக பிரகாஷ் சிங் என்பவர் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும்போது, மாநில அரசுகள் தங்களுக்கு சாதகமானவர்கள் மற்றும் அரசியல் சார்ந்த விஷயங்களுக்கு இணக்கமானவர்களை டிஜிபியாக பணியமர்த்துவதாக தெரிவித்தார். எனவே உடனடியாக இந்த நடைமுறையை நிறுத்துமாறு தெரிவித்த உச்சநீதிமன்றம் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது. அதாவது:-

1. டிஜிபிக்கள் பணி ஓய்வுக்கு 3 மாதத்திற்கு முன்னதாக, புதிய பரிந்துரை பெயர்களை யுபிஎஸ்சிக்கு மாநில அரசு அனுப்ப வேண்டும். 

2. யுபிஎஸ்சி சார்பில் குழு அமைக்கப்பட்டு யாரை நியமிக்கலாம் என பெயர்கள் தேர்வு செய்யடும்.

3. யுபிஎஸ்சியால் தேர்வு செய்யப்பட்ட பெயர்கள் அந்தந்த மாநில அரசாங்கத்திற்கு அனுப்பப்படும். அவர்களில் ஒருவரை மாநில அரசு டிஜிபியாக நியமனம் செய்ய வேண்டும்.

4. இடைக்கால டிஜிபியாக யாரையும் நியமனம் செய்யக் கூடாது. டிஜிபி ஒருவரின் பதவி முடிந்தவுடன் அடுத்த நபர் அந்த பதவிக்கு நியமனம் செய்யப்படும் வரை இடைக்காலமாக நியமிக்கப்படுபவரே இடைக்கால டிஜிபி ஆகும். தற்போதுள்ள உச்சநீதிமன்றத்தின் முடிவால் ஒருவரின் பணி ஓய்வு முடிந்தவுடன் அடுத்த நபர் உடனடியாக அந்த பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும். 

5. ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் அதிகாரி ஒருவரை டிஜிபியாக நியமிக்கக் கூடாது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com