ஏர் இந்தியாPT
இந்தியா
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.80 லட்சம் அபராதம் விதித்தது விமான போக்குவரத்து இயக்குநரகம்! ஏன்?
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து இயக்குநரகம் ரூ.80 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் விமான போக்குவரத்து இயக்குநரகம் திடீர் ஆய்வு மேற்கொண்டதில் ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய இரண்டு பைலட்டுகள், 60 வயதானவர்கள் என்பது தெரியவந்தது.
மேலும் விமானிகளுக்கு வாரவிடுப்பு சரியாக வழங்காமல் இருப்பது, அவர்களின் பணி நேரத்தை அடிக்கடி நீட்டிப்பது, நீண்டதூர பயணங்களுக்கு பிறகு விமானிகளுக்கு போதுமான ஓய்வு சரிவர வழங்காமல் இருப்பது போன்ற விதிமீறல்களில் அந்நிறுவனம் ஈடுபட்டதையும் விமான போக்குவரத்து இயக்குநரகம் கண்டறிந்துள்ளது.
இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் பிறப்பித்தது. ஆனால் அதற்கு ஏர் இந்தியா நிறுவனம் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததால், விமானபோக்குவரத்து இயக்குநரகம் அந்நிறுவனத்திற்கு 80 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து இருக்கிறது.