விமானங்களில் இந்தி நாளிதழ்கள் வைக்க வேண்டும்: விமானபோக்குவரத்து தலைவர் வலியுறுத்தல்
விமானங்களில் இந்தி செய்திதாள்களும், இதழ்களும் இருப்பதை உறுதிசெய்யவேண்டும் என விமானசேவை நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்துறை இணைத் தலைவர் லலித் குப்தா அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த விமான போக்குவரத்துறை இணைத் தலைவர் லலித் குப்தா, விமானங்களில் இந்தி செய்தித் தாள்களும் இதழ்களும் இருப்பதில்லை என்றும், அப்படியே இருந்தாலும் அவை எண்ணிக்கையில் குறைவாகவே இருப்பதும் தெரிய வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். இது இந்திய அரசின் அதிகாரப்பூர்வ மொழிக் கொள்கைக்கு எதிராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே ஆங்கில மொழி செய்தித் தாள்கள் மற்றும் இதழ்களுக்கு இணையான எண்ணிக்கையில் இந்தி மொழி செய்தித்தாள்களும் இதழ்களும் இருப்பதை உறுதிசெய்யவேண்டும் என அவர் கூறியுள்ளார். அனைத்து துறைகளிலும் இந்தியை மத்திய அரசு கட்டாயமாக்கி வரும் நிலையில், மக்கள் பயன்படுத்தும் பொது இடங்களிலும் இந்தியை வலுக்கட்டாயமாக திணிக்கும் நடவடிக்கையில் மத்திய அமைச்சர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.