திருச்செந்தூர் கடல்
திருச்செந்தூர் கடல்முகநூல்

கடலில் நீராடிய பக்தர்கள்.. இழுத்துச் செல்லப்பட்ட கடல் அலை.. திருச்செந்தூர் கடலில் நடந்தது என்ன?

திருச்செந்தூர் கடலில் நீராடிய பக்தர்களுக்கு காலில் முறிவு ஏற்பட்டது. உடனே அங்கு இருந்த பாதுகாப்பு பணியாளர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..
Published on

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதே போல் இன்று விடுமுறை தினம் என்பதால் திருச்செந்தூருக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. மேலும் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இன்று கோவில் முன்புள்ள கடலில் நீராடி வருகின்றனர். இதற்கிடையில் கடலில் திடீரென ஏற்பட்ட அலையில் பக்தர்கள் இழுத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் அவர்களை போராடி மீட்டனர்.

இதில் கேரளா பாலக்காடு பகுதியைச் சேர்ந்த அனிதா என்ற 13 வயது சிறுமி காலில் காயம் ஏற்பட்டது. அதே போல் சாத்தூரைச் சேர்ந்த மாரிசாமி, திண்டிவனத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஸ்வரி, கமுதியைச் சேர்ந்த அன்னலெட்சுமி, மதுரையைச் சேர்ந்த ஆனந்தவல்லி உள்பட 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு ஏற்பட்டது.

திருச்செந்தூர் கடல்
திருச்செந்தூர் கடல்pt

இதையடுத்து அவர்கள் அனைவரும் கோவிலில் நிறுத்தப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அழைத்து வரப்பட்டு கோவிலில் உள்ள முதலுதவி சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். தொடர்ந்து கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கையும், கடலில் நீராடும் பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. எனவே பக்தர்களை பாதுகாப்பாக நீராடும்படி கோவில் நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com