\
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசிக்க இன்று அனுமதி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசிக்க இன்று அனுமதி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசிக்க இன்று அனுமதி
Published on
சித்திரை ஆட்ட சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று பக்தர்கள் தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாத பூஜையின் போது, கனமழை பெய்ததால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த மாதத்தின் சிறப்பு பூஜைக்காக இன்று ஒரு நாள் மட்டும் கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 25 ஆயிரம் பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. வருகிற 15ஆம் தேதி மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக கோயில் நடை மீண்டும் திறக்கப்படவுள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com