அயோத்தி ராமர் கோயிலில் கூட்டநெரிசல்... பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு

நேற்று அயோத்தி ராமர் கோயிலில் பிராண பிரிதிஷ்டை முடிவடைந்த நிலையில் இன்று முதல் பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அயோத்தி ராமர் கோயிலில் கூட்டநெரிசல்
அயோத்தி ராமர் கோயிலில் கூட்டநெரிசல்புதிய தலைமுறை

அயோத்தி ராமர் கோயிலில் நேற்று பிராண பிரதிஷ்டை நடைபெற்ற நிலையில் இன்று முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்காரணமாக கோயிலுக்கு கூட்டம் அதிகரித்தது. இதையடுத்து பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக எதிர்ப்பார்க்கப்பட்ட அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை கோலாகலமாக நேற்று (22.1.2024) நடைபெற்றது.

இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதனால் பொதுமக்களுக்கான தரிசனம் நேற்று அனுமதிக்கப்படாத நிலையில் இன்று கோயிலுக்குள் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அயோத்தி ராமர் கோயிலில் கூட்டநெரிசல்
“அவர்கள் கேட்கல” - ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷத்துடன் தேவாலயத்தில் காவிக்கொடி ஏற்றிய கும்பல்! போதகர் வேதனை!

அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மிஞ்சும் வகையில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் போலீசார் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com