சபரிமலையில் மழை : கொட்டும் மழையில் நனைந்தவாறு பக்தர்கள் இடைவிடாது சாமி தரிசனம்

சபரிமலையில் மழை : கொட்டும் மழையில் நனைந்தவாறு பக்தர்கள் இடைவிடாது சாமி தரிசனம்
சபரிமலையில் மழை : கொட்டும் மழையில் நனைந்தவாறு பக்தர்கள் இடைவிடாது சாமி தரிசனம்

கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 15ம் தேதி நடை திறக்கப்பட்டு 16ம் தேதி முதல் முன்பதிவு செய்த 30 ஆயிரம் பக்தர்கள் தினசரி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வந்தனர். 

இந்நிலையில் தரிசனத்திற்காக முன்பதிவு செய்யாதவர்களுக்கு நிலக்கல்லில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி செய்யப்பட்டுள்ளது.

முன்பதிவு  செய்யாமல் வரும் பக்தர்கள்  "ஸ்பாட் புக்கிங்" மையங்கள் மூலம் முன்பதிவு செய்து தரிசனம் செய்து வருகின்றனர்.  

கடந்த வெள்ளிக்கிழமை 27,840 பக்தர்கள் தரிசனம் செய்திருந்த நிலையில், சனிக்கிழமையான ஒரே நாளில் 42,354 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.ஞாயிறு விடுமுறை நாளான நேற்று 30,017 பக்தர்கள் தரிசனம் செய்திருந்த நிலையில் திங்கட்கிழமையான. இன்று  முன்பதிவு செய்த 40,695 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

திங்கட்கிழமை மாலை சபரிமலை சன்னிதானம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது. ஐயப்ப பக்தர்கள் மறைக்கும் அணிந்தவாறு தொடர்ச்சியாக சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் நடை பந்தலில் பல மணி நேரம் காத்திருந்து பதினெட்டாம் படியேறி தரிசனம் செய்யும் சூழல் ஏற்பட்டது.

கனத்த மழை பெய்தாலும் ஐயப்ப பக்தர்கள் ஆன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் மழையில் நனைந்தவாறும் சிலர் மழை கோட் அணிந்தும் மழை வெள்ளம் உருண்டோடும் பதினெட்டாம் படியேறி  சாமி தரிசனம் செய்தனர். 

மழையில் நனைந்தவாறு பக்தர்களுக்கான பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

டிசம்பர் 9ம் தேதி முதல் மகரவிளக்கு தினமான 2022 ஆம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வரை "வெர்ச்சுவல் க்யூ" முன்பதிவு மூலம் தினசரி 40 ஆயிரம் பக்தர்கள், "ஸ்பாட் புக்கிங்" முன்பதிவு மூலம் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் என  தினசரி  45,000 பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முடிவு செய்துள்ளது. 

டிசம்பர் 26ம் தேதியோடு மண்டல பூஜை நிறைவடைந்து நடை அடைக்கப்படும். தொடர்ந்து வரும் டிசம்பர்  30ம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு 2022ம் ஆண்டு 2022 ஜனவரி 20ம் தேதி நடை அடைக்கப்படும். 2022ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com