\
நாளை மறுநாள் மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்கிறார் ஃபட்னாவிஸ் ?

நாளை மறுநாள் மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்கிறார் ஃபட்னாவிஸ் ?

நாளை மறுநாள் மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்கிறார் ஃபட்னாவிஸ் ?
Published on: 

மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் வரும் வெள்ளிக்கிழமை பதவியேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 6 நாட்களாகியும், ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக-சிவசேனா இடையே இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் இன்று மும்பை செல்லும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேசுவார் எனக் கூறப்படுகிறது. 

உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு துணை முதல்வர் பதவி வழங்க பாஜக முன்வந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்த சந்திப்பின்போது அது உறுதிப்படுத்தப்படும் எனத் தெரிகிறது. இதனிடையே மகாராஷ்டிராவின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் பாஜக தேசிய துணைத் தலைவர் அவினாஷ் ராய் கண்ணா ஆகியோரை அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா நியமித்திருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com