''நான் சொன்னது உள்ளாட்சி அமைப்புகளுக்குத்தான்; சட்டப்பேரவைக்கு அல்ல'' - தேவகவுடா

''நான் சொன்னது உள்ளாட்சி அமைப்புகளுக்குத்தான்; சட்டப்பேரவைக்கு அல்ல'' - தேவகவுடா
''நான் சொன்னது உள்ளாட்சி அமைப்புகளுக்குத்தான்; சட்டப்பேரவைக்கு அல்ல'' - தேவகவுடா

கர்நாடக மாநிலத்தில் விரைவில் தேர்தல் வரும் என தான்  குறிப்பிட்டது உள்ளாட்சி அமைப்புகளுக்குத்தான் என்றும் சட்டப்பேரவைக்கு அல்ல என்றும் தேவகவுடா விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக குமாரசாமி தலைமையிலான ஆட்சிக்கு ‌ 5 ஆண்டுகளும் ஆதரவு ‌தருவதாக காங்கிரஸ் உறுதியளித்திருந்ததாகவும் ஆனால் ‌அக்கட்சி வாக்குறுதியை காப்பாற்றுவது போல் தெரியவில்லை என்றும் தேவ‌கவுடா தெரிவித்திருந்தார். கர்நாடகாவில் இடைத் தேர்தல் நடைபெறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அவரது பேச்சு கர்நாடக அரசியலில் பெரும்‌‌ அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. 

யார் என்ன சொன்னாலும் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு தொடரும் என்று கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா தெரிவித்திருந்தார். இந்நிலையில் தான் சட்டப்பேரவை தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை என்றும் உள்ளாட்சி ‌அமைப்புகளுக்கு இடைத்தேர்தல் வரும் என்றே குறிப்பிட்டதாகவும் தேவ கவுடா விளக்கம் அளித்துள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி அரசு மீதமுள்ள 4 ஆண்டுகளையும் பூர்த்தி செய்யும் என்றும் தேவகவுடா‌ தெரிவித்தார்

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகின்றன. தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்- ஜனதா தளம் கட்சி படுத்தோல்வியடைந்தது. இந்த இரு கட்சிகளும் தலா ஒரு இடத்தில் மட்டும் வெற்றிப் பெற்றன. இதனையடுத்து காங்கிரஸ்-ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் தேவகவுடாவின் பேச்சு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com