எந்தெந்த மாநிலங்களுக்கு எத்தனை மத்திய அமைச்சர்கள்? தோல்வியை கொடுத்த உ.பி-க்கு அதிக அமைச்சர்களா?

பிரதமர் மோடியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில், எந்தெந்த மாநிலங்களுக்கு எத்தனை அமைச்சர்கள் கிடைத்துள்ளனர் என்ற விவரத்தை பார்க்கலாம்.
எத்தனை மத்திய அமைச்சர்கள்
எத்தனை மத்திய அமைச்சர்கள்புதிய தலைமுறை

பிரதமர் மோடியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில், எந்தெந்த மாநிலங்களுக்கு எத்தனை அமைச்சர்கள் கிடைத்துள்ளனர் என்ற விவரத்தை பார்க்கலாம்.

மக்களவைத் தேர்தலில் தங்களது தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள், மாநிலத்தின் பிரதிநிதியாக மாநிலங்களவைக்கு தேர்வானவர்கள் மற்றும் மாநிலங்களவைக்கு இனி தேர்ந்தெடுக்கப்போகிறவர்கள் என்ற வரிசையில், எந்தெந்த மாநிலத்திற்கு எத்தனை அமைச்சர்கள் கிடைத்துள்ளார்கள் என்ற விவரத்தை ஆராய்ந்து பார்த்தோம்.

அதில், அதிகப்பட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து 11 பேர் இடம் பெற்றுள்ளனர்.

அதில், பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், ஹர்தீப்சிங் பூரி, பங்கஜ் செளத்ரி, அனுப்பிரியா பட்டேல், ஜிதின் பிரசாத், ஜெயந்த் செளத்ரி, எஸ்.பி.சிங் பாஹேல், பி.எல்.வர்மா, கமலேஷ் பாஸ்வான், கீர்த்தி வர்தன் சிங் ஆகியோர் உள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக பீகாரில் இருந்து 8 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கிரிராஜ் சிங், நித்யானந்த் ராய், சதீஷ் சந்திர துபே, சிராக் பாஸ்வான், ஜித்தன் ராம் மாஞ்சி, ராம்நாத் தாகூர், ராஜீவ் ரஞ்சன், ராஜ்பூஷன் செளத்ரி ஆகியோர் அமைச்சர்களாகியுள்ளனர். மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசத்தில் இருந்து தலா 6 ஆறு பேர் அமைச்சர்கள் ஆகியுள்ளனர்.

மகாராஷ்டிராவை பொறுத்தவரை, நிதின் கட்கரி, பியூஷ் கோயல், ரக்சா நிகில் கட்சே, முரளிதர் மொஹோல், ஜாதவ் பிரதாப் ராவ் கண்பத்ராவ், ராம்தாஸ் அத்வாலே ஆகியோரும், மத்தியப்பிரதேசத்தில் இருந்து, சிவராஜ் சிங் சவுகான், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, சாவித்ரி தாக்கூர், வீரேந்திர குமார், எல்.முருகன், துர்காதாஸ் உய்கே ஆகியோரும் அடங்குவர்.

எத்தனை மத்திய அமைச்சர்கள்
இன்றைய பங்குச்சந்தை நிலவரம் என்ன? லாபம் தரும் பங்குகள் எவை எவை? தங்கம் விலையில் ஏற்றம் இருக்கா?

கர்நாடகா மற்றும் குஜராத்தில் இருந்து தலா 5 பேர் அமைச்சர்களாகியுள்ளனர்.

கர்நாடகாவில் இருந்து நிர்மலா சீதாராமன், ஹெச்.டி.குமாரசாமி, பிரகலாத் ஜோஷி, ஷோபா கரந்த்லாஜே, வீரன்னா சோமண்ணா ஆகியோரும்,

குஜராத்தில் இருந்து அமித் ஷா, ஜெய்சங்கர், மன்சுக் மாண்டவியா, சி. ஆர்.பாட்டீல், நிமுபென் ஜெயந்திபாய் பாம்பனியா ஆகியோரும் அமைச்சர்களாகியுள்ளனர்.

ராஜஸ்தானில் இருந்து கஜேந்திரசிங் ஷெகாவத், அர்ஜூன் ராம் மேக்வால், பூபேந்திர யாதவ், பஹிரத் செளத்ரி ஆகிய நான்கு பேரும்,

ஓடிசாவில் இருந்து அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான், ஜூவல் ஓரம் ஆகிய மூவரும்,

ஆந்திராவில் இருந்து சந்திரசேகர் பெம்மாசானி, ராம்மோகன் நாயுடு, பூபதிராஜூ ஸ்ரீநிவாஸ் ஆகிய மூன்று பேரும்,

ஹரியானாவில் இருந்து மனோகர்லால் கட்டார், ராவ் இந்தர்ஜித் சிங், கிருஷ்ணன் பால் ஆகிய மூவரும் அமைச்சர்கள் ஆகியுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் இருந்து சாந்தனு தாக்கூர், சுகந்தா மஜூம்தார் ஆகியோரும்,

எத்தனை மத்திய அமைச்சர்கள்
மோடியின் மூன்றாவது அமைச்சரவை: அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள மூன்று தமிழர்கள் - யார் யார்?

தெலங்கானாவில் இருந்து கிஷண் ரெட்டி, பண்டி சஞ்சய் குமார் ஆகியோரும்,

அஸ்ஸாமிலிருந்து சர்பானந்த சோனாவால், பபித்ரா மார்கரீட்டா ஆகியோரும்,

கேரளாவில் இருந்து சுரேஷ் கோபி, ஜார்ஜ் குரியன் ஆகியோரும் அமைச்சர்களாகியுள்ளனர். இதில் ஜார்ஜ் குரியன் இனிமேல்தான் மாநிலங்களவைக்கு எம்.பி.யாக தேர்வு செய்யப்படவுள்ளார்.

ஜார்கண்ட்டில் இருந்து சஞ்சய் சேத், அன்னபூர்ணா தேவி, பஞ்சாப்பிலிருந்து ரவ்நீத் சிங் பிட்டு, உத்தராகண்டில் இருந்து அஜய் டம்டா,

டெல்லியில் இருந்து ஹர்ஸ் மல்கோத்ரா, அருணாச்சலில் இருந்து கிரண் ரிஜிஜூ,

கோவாவில் இருந்து ஸ்ரீபாத் யசோ நாயக், ஜம்மு-காஷ்மீரில் இருந்து ஜிதேந்திர சிங், ஹிமாச்சலில் இருந்து ஜெ.பி.நட்டா, சத்தீஸ்கரில் இருந்து தோஹன் சாஹூ ஆகியோரும் அமைச்சர்கள் ஆகியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com