சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விவரங்கள்: இம்மாதம் 3வது பட்டியல்

சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விவரங்கள்: இம்மாதம் 3வது பட்டியல்
சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விவரங்கள்: இம்மாதம் 3வது பட்டியல்

சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விவரங்கள் குறித்த மூன்றாம் பட்டியலை சுவிட்சர்லாந்து அரசு இந்தியாவிடம் இம்மாதம் வழங்குகிறது.

சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் இந்தியர்களின் கணக்கு விவரங்களை பரிமாறிக்கொள்வது பற்றி 2016 ஆம் ஆண்டு இரு நாடுகளிடையே தகவல் பரிமாற்ற உடன்படிக்கை ஏற்பட்டது. இதன் மூலம் வரிசெலுத்துவோர் தங்கள் வருமான வரிக்கணக்கு தாக்கலில் சுவிஸ் வங்கிக்கணக்கு விவரங்களை சரியாக குறிப்பிட்டுள்ளார்களா என்பதைக் கண்டறிய முடியும். இந்த உடன்படிக்கையின்படி, 2019 ஆம் ஆண்டு செப்டம்பர், கடந்த ஆண்டு செப்டம்பர் என இரண்டு முறை சுவிட்சர்லாந்து அரசிடமிருந்து விவரங்கள் பெறப்பட்டன. இதன் தொடர்ச்சியாக மூன்றாவது பட்டியலை இந்த மாதம் சுவிட்சர்லாந்து அரசு வழங்குகிறது. இந்த ஆண்டு இந்த விவரங்களுடன் சுவிஸ்ஸில் நிலம், கட்டடங்களில் இந்தியர்கள் செய்துள்ள முதலீடுகள் குறித்த தகவல்களையும் வழங்க, சுவிட்சர்லாந்து அரசு முடிவு செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com