\
ஜனவரி - டிசம்பர் : 2020இல் சிலிண்டர் விலை சந்தித்த ஏற்ற இறக்க விபரங்கள்!

ஜனவரி - டிசம்பர் : 2020இல் சிலிண்டர் விலை சந்தித்த ஏற்ற இறக்க விபரங்கள்!

ஜனவரி - டிசம்பர் : 2020இல் சிலிண்டர் விலை சந்தித்த ஏற்ற இறக்க விபரங்கள்!
Published on

நடப்பாண்டில் சிலிண்டர் விலையானது, சந்தித்த ஏற்ற இறக்கங்களை பற்றி பார்க்கலாம். 

2020 ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி வீட்டு உபயோக சிலிண்டர் ஒன்றின் விலை 734 ரூபாயாக இருந்தது. அதற்கு அடுத்த மாதத்திலேயே சிலிண்டரின் விலையானது 734 லிருந்து 881 ரூபாயாக உயர்ந்தது. அடுத்து வந்த மாதங்களில் சிலிண்டர் விலை இறங்குமுகத்தில் காணப்பட்ட நிலையில், மே மாதத்தில் இந்த ஆண்டின் குறைந்த பட்ச விலையாக ஒரு சிலிண்டரின் விலை 569 ரூபாய் 50 காசாக விற்கப்பட்டது.

அடுத்து வந்த மாதங்களில் சிலிண்டர் விலை மாற்றமில்லாமல் காணப்பட்ட நிலையில், சென்ற செப்டம்பரில் சிலிண்டர் ஒன்றின் விலை 610 ரூபாயாகவும், டிசம்பர் ஒன்றாம் தேதி 660 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், டிசம்பர் 15ஆம் தேதி சிலிண்டர் ஒன்றின் விலை 710 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com