மருத்துவமனைக்குள் நுழைந்த ’அவ்வை சண்முகி’ போலீஸ் சுற்றி வளைப்பு!
பர்தா அணிந்துகொண்டு மருத்துவமனையின் தொழிலாளர் அறைக்குள் நுழைந்த போலீஸ் அதிகாரி சுற்றிவளைக்கப்பட்டதை அடுத்து அங்கிரு ந்து தப்பியோடினார்.
கேரள மாநிலம் தொடுபுழாவில், அல்-அசார் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு கடந்த வெள்ளிக் கிழமை இரவு பர்தா அணிந்த பெண் ஒருவர் வந்தார். மருத்துவமனையில் ஓரத்தில் இருந்த தொழிலாளர்களின் அறைக்குள் நுழைந்தார். அங்கிருந்த பெண் தொழிலாளர்கள், அவரிடம் ’யார் நீங்க, என்ன வேணும்?’ என்று பேச்சுக்கொடுத்தனர். அப்போது அவர் பேச்சும் நடையும் அவர்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. திடகாத்திரமான உடல்வாகும் அவர்களுக்கு இதில் ஏதோ சிக்கல் இருப்பதை உணர்த்த, செக்யூரி ட்டிக்கு அவர்கள் போன் செய்தனர்.
இதையறிந்த அந்த பர்தா பெண், தப்பி ஓடினார். இருந்தாலும் மருத்துவமனை செக்யூரிடிகள் அவரை விரட்டி பிடித்து அடித்தனர். அப்போது பர்தா முகத்தில் இருந்து விலக, அது போலீஸ் அதிகாரி நூர் சமீர் என்பது அவர்களுக்குத் தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தனர்.
’அவ்வை சண்முகி’ வேடத்தில் இங்கு ஏன் இவர் வரவேண்டும்? என்று சந்தேகம் அடைந்த அவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித் தனர். அவர்கள் வந்து சேர்வதற்குள், சமீர் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். இதையடுத்து போலீஸ் அதிகாரி சமீர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. அவர் ஏன் மாறுவேடத்தில் அங்கு சென்றார் என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சமீர், ஏற்கனவே ஆறு மாதம் சஸ்பென்ட் செய்யப்பட்டு சமீபத்தில்தான் பணியில் மீண்டும் சேர்ந்தாராம்.