\
மழையில் மிதந்த பாலைவன மாநிலம்!

மழையில் மிதந்த பாலைவன மாநிலம்!

மழையில் மிதந்த பாலைவன மாநிலம்!
Published on

பாலைவன மாநிலம் என அழைக்கப்படும் ராஜஸ்தான் இந்தாண்டு 26 சதவிகிதம் கூடுதல் மழையை பெற்றுள்ளதாக அம்மாநில நீர் வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கடந்த மாதம் பெய்த பலத்த மழை காரணமாக 164 அணைகள் முழுவதும் நிரம்பியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். பார்மர், ஜெய்சல்மார், ஜலோர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வெள்ளம் முழுமையாக வடிந்துள்ள நிலையில் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. பாலைவன மாநிலம் என அழைக்கப்படும் ராஜஸ்தான் இந்தாண்டு 26 சதவிகிதம் கூடுதல் மழையை பெற்றுள்ளதாகவும் அம்மாநில நீர் வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com