ஆண் குழந்தை இல்லாததால் 3 பெண் குழந்தைகளுடன் தாய் தற்கொலை
2 மாத கைக் குழந்தை உட்பட 3 பெண் குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்
அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், சிக்கபல்லபுரா மாவட்டத்தில் உள்ள ஹனுமந்தபுரா என்ற குக்கிராமத்தில் இந்தச் சோக சம்பவம்
நடைபெற்றுள்ளது. ஆண் குழந்தை இல்லாமல், மூன்றும் பெண் குழந்தைகளாக பிறந்த விரக்தியில் அந்தப் பெண் தற்கொலை
செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் கூலி வேலை செய்யும் அவரது கணவனோ அல்லது உறவினர்களோ யாரும் ஏன் ஆண் குழந்தை
பெற்றெடுக்கவில்லை என்று துன்புறுத்தவில்லை என்று கூறப்படுகிறது. நாகஸ்ரீ என்ற அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே நவ்யஸ்ரீ(5),
திவ்யஸ்ரீ(3) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு மூன்றாவதாகவும் ஒரு பெண்
குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த நாளில் இருந்து அவர் மிகந்த சோகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டிற்கு அருகில் தங்களுக்கு சொந்தமான கழனியில் உள்ள கிணற்றிற்கு குழந்தைகளை
அழைத்துச் சென்று தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.