சபரிமலை ஐயப்பனுக்கான தங்க அங்கி ஊர்வலம் புறப்பாடு

சபரிமலை ஐயப்பனுக்கான தங்க அங்கி ஊர்வலம் புறப்பாடு

சபரிமலை ஐயப்பனுக்கான தங்க அங்கி ஊர்வலம் புறப்பாடு
Published on

சபரிமலை ஐயப்பனுக்கு திருவிதாங்கூர் மகாராஜா வழங்கிய 453 பவுன் தங்க அங்கி, பத்தனம்திட்டாவிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

பத்தனம்திட்டா ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் மேளதாளம் முழங்க ஊர்வலம் புறப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆரன்முளாவில் இருந்து பம்பை வரையில் வழிநெடுகிலும் பல்வேறு கோயில்களில் பக்தர்களின் வரவேற்பு நிகழ்வுகள் நடக்கவுள்ளது.

டிசம்பர் 25ம் தேதி சபரிமலை செல்லும் தங்க அங்கி, ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்படவுள்ளது. டிசம்பர் 26 ஆம் தேதி மதியம், மண்டல பூஜை தொடங்கும் என திருவிதாங்கூர் தேவஸம் போர்டு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com