\
'இப்படியொரு கொடுமையா?' - மாற்றுத்திறனாளி குழந்தையை 4வது தளத்திலிருந்து வீசி கொன்ற பெண்

'இப்படியொரு கொடுமையா?' - மாற்றுத்திறனாளி குழந்தையை 4வது தளத்திலிருந்து வீசி கொன்ற பெண்

'இப்படியொரு கொடுமையா?' - மாற்றுத்திறனாளி குழந்தையை 4வது தளத்திலிருந்து வீசி கொன்ற பெண்
Published on

அம்மா என்றாலே அன்பு பாசம் என்று கேட்டு வளர்ந்திருப்போம். ஆனால் அவற்றை பொய்யாக்கும் வகையில் அவ்வப்போது சில சம்பவங்கள் நடைபெறுவதையும் நாம் கேள்விப்படுகிறோம். அதுபோல் பெற்ற குழந்தையையே தாய் ஒருவர் இரக்கமில்லாமல் மாடியிலிருந்து தூக்கிப்போட்டு கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

சிசிடிவியில் பதிவாகியுள்ள இந்த காட்சிகள் பார்ப்போரை பதைக்கவைக்கிறது. வடக்கு பெங்களூருவின் எஸ்.ஆர் நகரிலுள்ள ஒரு அபார்ட்மெண்ட்டின் 4வது தளத்திலிருந்து பெண் ஒருவர் தனது 4 வயது மகளை தூக்கி கீழே போடுகிறார். பின்னர் பால்கனி தடுப்பு கம்பிமீது ஏறி சிலநொடிகள் நிற்கிறார். அதற்குள் அங்குவந்த குடும்பத்தார் அந்த பெண்ணை கீழே விழாமல் இழுத்துவிடுகின்றனர்.

ஆனால் கீழே தூக்கிப்போடப்பட்ட சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த சிறுமி வாய் பேசமுடியாதவர் மற்றும் காது கேளாதாவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அந்த பெண்ணின்மீது கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த பெண் பல் மருத்துவர் மற்றும் அவரது கணவர் சாஃப்ட்வேர் என்ஜினீயர். சிறுமியின் தாயார் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தாரா உட்பட பல கோணங்களில் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com