டெல்லியில் கடும் பனிமூட்டம்: விமான சேவை பாதிப்பு

டெல்லியில் கடும் பனிமூட்டம்: விமான சேவை பாதிப்பு

டெல்லியில் கடும் பனிமூட்டம்: விமான சேவை பாதிப்பு
Published on

டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால், விமான சேவை இரண்டு மணி நேரம் தாமதமானது.

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனி நிலவுகிறது. இதன் காரணமாக, எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல், கடந்த சில நாட்களாக அதிக சாலை விபத்துகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் டெல்லியில் நிலவும் கடும் பனி காரணமாக, விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

இன்று காலை 7.15 மணியில் இருந்து 9.16 மணி வரை போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால், எந்த விமானமும் டெல்லி யில் இருந்து புறப்பட அனுமதிக்கப்படவில்லை. ஓடுபாதை சரியாக தெரியாததால் விமான புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், விமானம் தரையிறங்குவதில் பிரச்னை ஏற்படவில்லை. 

இந்த தாமதத்தால் தங்களின் கிறிஸ்துமஸ் பயணத் திட்டம் பாதிப்படைந்ததாக சமூக வலைத்தளங்களில் சில பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com