ஆம்புலன்ஸ் மறுப்பு: இறந்தவரின் உடலை சுமந்து சென்ற உறவினர்கள்

ஆம்புலன்ஸ் மறுப்பு: இறந்தவரின் உடலை சுமந்து சென்ற உறவினர்கள்

ஆம்புலன்ஸ் மறுப்பு: இறந்தவரின் உடலை சுமந்து சென்ற உறவினர்கள்
Published on

பீகாரில் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் வழங்க மறுத்ததால், இறந்தவரின் உடலை உறவினர்களே இல்லம் வரை சுமந்து சென்ற கொடுமை நிகழ்ந்துள்ளது.

ஷிவ்புரி பகுதியை சேர்ந்த சுரேஷ் மண்டல் என்பவரின் மனைவி உடல்நலக் குறைவால் கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்தார். உடலைக் கொண்டு செல்ல தனியார் ஆம்புலன்ஸூக்கு கொடுக்கும் அளவுக்கு தங்களிடம் வசதி இல்லை‌ எனவும், ஆகவே அமரர் ஊர்தி வாகனம் ஒன்றை வழங்குமாறும் அரசு மருத்துவமனையை அந்தப் பெண்ணின் உறவினர்கள் கேட்டுள்‌ளனர். ஆனால், வாகனம் வழங்க மருத்துவமனை மறுத்துவிட்டதால், உறவினர்களே சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு உடலைச் சுமந்து சென்றுள்ளனர். இதனிடையே மருத்துவமனை நிர்வாகம் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com