இந்தியா
பணமதிப்பிழப்பு விவகாரம்: தகவல் அளிக்க நிதி அமைச்சகம் மறுப்பு
பணமதிப்பிழப்பு விவகாரம்: தகவல் அளிக்க நிதி அமைச்சகம் மறுப்பு
பண மதிப்பு நீக்க அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு பிரதமர், நிதி அமைச்சருடன் ஆலோசித்தாரா? என்பது குறித்த தகவல்களை வெளியிட, நிதி அமைச்சகம் மறுத்துள்ளது.
இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு, இது தொடர்பான தகவல்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், வெளியிட முடியாதவை என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக பிரதமர் அலுவலகமும், இந்திய ரிசர்வ் வங்கியும் இதே போல தகவல் அளிக்க மறுத்தன. பண மதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பாக, நிதி அமைச்சர் மற்றும் தலைமை பொருளாதார ஆலோசகரிடம் ஆலோசிக்கப்பட்டதா என்ற தகவல், ஆர்டிஐ யின் தகவல் என்ற வரையறைக்குள் வராது என சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் கூறுகின்றன.