\
Demonetisation: 10 Years Since India Scrapped ₹500 and ₹1,000 Notes
DemonetisationAI

பணமதிப்பிழப்பு நடவடிக்கை | 10 ஆண்டுகள் நிறைவு.. 2016 முதல் 2026 வரையிலான மாற்றங்கள் என்னென்ன?

இந்தியப் பொருளாதார வரலாற்றில் அதிர்வலைகளை ஏற்படுத்திய, பழைய 500 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நடந்தது என்ன.. பார்க்கலாம்.
Published on: 

கருப்புப் பணம் மற்றும் போலி ரூபாய் நோட்டுகளை ஒழித்தல் மற்றும் ரொக்கமில்லாப் பொருளாதாரமாக மாற்றுதல் ஆகிய இலக்குகளுடன் நவம்பர் 8, 2016 அன்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்பட்ட 15.44 லட்சம் கோடி மதிப்புள்ள 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் 99.3 சதவீதத்திற்கும் அதிகமான பணம் வங்கிகளுக்குத் திரும்பிவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இருப்பினும் 2016 நவம்பர் 4 அன்று மக்களிடம் புழக்கத்தில் இருந்த பணத்தின் மதிப்பு 17.97 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. பணமதிப்பிழப்புக்குப் பின் 2017 ஜனவரியில் அது 7.8 லட்சம் கோடி ரூபாயாக குறைந்தாலும், தற்போது 2026 அக்டோபர் நிலவரப்படி பணப்புழக்கம் 137 சதவீதம் அதிகரித்து 42.55 லட்சம் கோடி ரூபாயாக உச்சம் தொட்டுள்ளது.

Reuters

அதேபோல் 2016 நவம்பரில் ஜிடிபி விகிதத்தில் 8.7 சதவீதமாக குறைந்த பணப்புழக்கம், 2026இல் சுமார் 11.5 சதவீதம் முதல் 12 சதவீதம் என்ற நிலையில் நீடிக்கிறது. இது பணமதிப்பிழப்புக்கு முந்தைய காலகாட்டத்தில் நிலவிய அதே விகிதமாகும். அதேசமயம், கடந்த 2025–26 நிதியாண்டில் மட்டும் வங்கிப் பரிமாற்றங்கள், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் யுபிஐ உள்ளிட்ட மின்னணு வழிகள் மூலமாக 3 ஆயிரத்து 251 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இருப்பினும் சிறு வணிகங்களின் தினசரி செயல்பாடுகள் மற்றும் நெருக்கடிக் காலங்களில் மக்கள் பணத்தையே நம்பியிருப்பது போன்றவை பணப்புழக்கத்தை இன்றளவும் முதன்மையாக வைத்துள்ளது.

Demonetisation: 10 Years Since India Scrapped ₹500 and ₹1,000 Notes
ஆழ்கடலில் இந்தியாவின் பாய்ச்சல்.. 6000 மீட்டர் ஆழத்தை நோக்கி MATSYA-6000!