\
ஒடிசாவில் சாலையிலேயே நடந்த பிரசவம்

ஒடிசாவில் சாலையிலேயே நடந்த பிரசவம்

ஒடிசாவில் சாலையிலேயே நடந்த பிரசவம்
Published on: 

ஒடிசா மாநிலத்தில், ஆம்புலன்ஸ் சேவை கிடைக்காததால் கர்ப்பிணிக்கு ஒடிசா சாலையிலேயே பிரசவம் நிகழ்ந்தது. 

மயுர்பாஞ்ச் மாவட்டத்தில் உள்ள சுலிபாடா நவுகான் பகுதியைச் சேர்ந்த பிரமிளா சிங் என்ற கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டு குடும்பத்தினர் ஆம்புலன்ஸூக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆம்புலன்ஸ் வர நேரமானதால் பிரமிளா சிங்கை தாங்களாகவே அழைத்து செல்ல முற்பட்டுள்ளனர். வேறு வாகன வசதி இல்லாததால் சைக்கிளில் கர்ப்பிணி பெண்ணை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில்,சாலையிலேயே அவருக்கு பிரசவம் நிகழ்ந்து குழந்தையை பெற்றெடுத்தார். இதன் பின்னர் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். உரிய நேரத்திற்கு ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் சாலையிலேயே பிரசவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com