ஜிம் Treadmill-ல் உடற்பயிற்சி மேற்கொண்ட 24 வயது இளைஞர், மின்சாரம் தாக்கி பலி!

டெல்லி ஜிம்மில் ட்ரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்த 24 வயது இளைஞரொருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்
சஷம் ப்ருதி
சஷம் ப்ருதிட்விட்டர்

டெல்லியை சேர்ந்த சஷம் ப்ருதி என்ற 24 வயது இளைஞர் ஒருவர், ரோகிணி செக்டார் பகுதியில் உள்ள உடற்பயிற்சி நிலையம் ஒன்றில் டிரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்தபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

டிரெட்மில்
டிரெட்மில்

சஷம் ப்ருதி, பிடெக் முடித்துவிட்டு குருகிராமில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். தினமும் வீட்டின் அருகில் இருக்கும் உடற்பயிற்சி நிலையத்திற்கு செல்வதை வழக்கமாக கொண்ட இவர், சம்பவம் நடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) காலை 7.30 மணியளவிலும் ஜிம்முக்கு சென்று, வழக்கம்போல் டிரெட்மில்லில் நடந்துள்ளார்.

அப்பொழுது அதில் மின்சாரக்கசிவு ஏற்பட்டதில், சரிந்து கீழே விழுந்துள்ளார் சஷம் ப்ருதி. உடனடியாக அங்குள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனையின் முடிவிலும், மின்சாரம் தாக்கியதால் தான் சஷம் ப்ருதி இறந்தாரென உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து உடற்பயிற்சி கூட மேலாளர் அனுபவ் துக்கலை போலீசார் கைது செய்தனர்.

டிரெட்மில்
டிரெட்மில்

அனுபவ் துக்கல் மீது கொலைக்குற்றம் மற்றும் இயந்திரங்கள் தொடர்பாக அலட்சியமாக நடந்து கொண்டது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com