\
’என் கணவர் விஞ்ஞானி...’: பெருமைப்பட்ட மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

’என் கணவர் விஞ்ஞானி...’: பெருமைப்பட்ட மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

’என் கணவர் விஞ்ஞானி...’: பெருமைப்பட்ட மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!
Published on

விஞ்ஞானியை திருமணம் செய்திருப்பதாக நினைத்த மனைவிக்கு உண்மை தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்தார்.

டெல்லியைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி ஒருவருக்கு அறிமுகமானார் ஜிதேந்தர் சிங் என்ற இளைஞர். இருவரும் பழகியுள்ளனர். மாணவியிடம், தான் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் (டிஆர்டிஓ) விஞ்ஞானியாகப் பணியாற்றுவதாகத் தெரிவித்துள்ளார். 



இதை நம்பிய அந்த மாணவி, அவரைக் காதலித்துள்ளார். அப்போது போலியான அடையாள அட்டையையும் காண்பித்துள் ளார், சிங். பின்னர் நெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். தனது கணவர் விஞ்ஞானி என்று தனது தோழிகளிடம் பெருமையோடு சொல்லி வந்துள்ளார் அவர்.

பிறகுதான் தெரிந்தது, சிங் வேலை இல்லாமல் இருக்கிறார் என்பது. அவர் விஞ்ஞானி என்று பொய் சொல்லி திருமணம் செய்துள்ளார். இது தெரிந்து நொந்து போன அவருக்கு மேலும் ஓர் அதிர்ச்சிக் காத்திருந்தது. அது, சிங் ஏற்கனவே திருமணமானவர் என்பது. 

தன்னை ஏமாற்றி மோசடி செய்து திருமணம் செய்துகொண்டதை அடுத்து டெல்லியில் உள்ள துவாரகா போலீசில் புகார் செய்தார் அவர். வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரித்து வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com