‘என் தாயை காப்பாற்ற ஆஜ்சிஜன் தாருங்கள்’ : ஆலை முன்பு மன்றாடி அழுத பெண் - உலுக்கும் பின்னணி

‘என் தாயை காப்பாற்ற ஆஜ்சிஜன் தாருங்கள்’ : ஆலை முன்பு மன்றாடி அழுத பெண் - உலுக்கும் பின்னணி

‘என் தாயை காப்பாற்ற ஆஜ்சிஜன் தாருங்கள்’ : ஆலை முன்பு மன்றாடி அழுத பெண் - உலுக்கும் பின்னணி
Published on

தனது தாயை காப்பாற்றுவதற்காக ஆக்ஸிஜன் சிலிண்டரை நிரப்புவதற்காக டெல்லியின் தெருக்களில் மணிக்கணக்கில் காத்து கிடந்தவர் தான் ஸ்ருதி சஹா. காத்திருப்புக்கு பலனில்லாமல் போனபோது, சஹா உடைந்த அழுதார். இயலாமையால் ஸ்ருதி சஹா அழுத அந்த காட்சிகள் தொடர்பாக வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோ, இணையத்தில் வைரல் ஆகியிருந்தது. உண்மையில் அந்த வீடியோவின் பின்னணி என்ன என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பின் காரணமாக நம் நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நெருக்கடி கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. ஆக்ஸிஜன் வழங்குமாறு அதிகாரிகளிடம் கெஞ்சும் மக்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர்களை நிரப்ப நீண்ட வரிசைகள், மருத்துவமனைகளுக்கு வெளியே சரிந்து கிடக்கும் கொரோனா நோயாளிகள் தொடர்பான காட்சிகள். புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் நிரம்பி வழிகின்றன. அதுபோன்ற ஒரு புகைப்படம் தான் சமீபத்தில் பலரின் கண்களை கலங்க வைத்துள்ளது.

சில தினங்கள் முன், சஹா டெல்லியின் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதிகளில் ஆக்ஸிஜன் சிலிண்டரை நிரப்பும் ஆலைக்கு வெளியே காத்திருந்துள்ளார். அப்போது அங்கிருந்த காவலர்களுடன், "ஆலையை திறக்க வேண்டும். சரியான நேரத்தில் ஆக்ஸிஜன் கிடைத்தால் தான் தாயை காப்பாற்ற முடியும்" என கெஞ்சுகிறார். ஆனால் அனைத்தும் வீண். சஹா எதிர்பார்த்தபடி, ஆக்ஸிஜன் கிடைக்காததால் ஏற்பட்ட விளைவு, அவர் தாயின் மரணம்.

வரிசையில் காத்திருந்தபோது அவரின் வீட்டிலிருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பு தாயின் மறைவைப் பற்றி சஹாவுக்கு தெரிவித்தது. அந்த நொடியே, வரிசையில் நின்றுகொண்டிருந்தவர் சரிந்து கீழே விழுந்தவர், அப்படியே கதறி அழுத் தொடங்கினார். வழிப்போக்கர்கள் அவரை ஆறுதல்படுத்த முயன்றனர். ஆனால், "நாங்கள் அதிகாலை 2 மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்தோம். டெல்லியில் எங்கும் ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை. இறுதியாக, நாங்கள் இங்கு வந்தோம். அம்மாவின் உடல்நிலை மோசமாக இருக்கிறது என்று நான் அவர்களிடம் சொல்லிக்கொண்டே இருந்தேன்.

ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இரண்டு நாட்களாக, நாங்கள் பல மருத்துவமனைகளில் அனுமதிக்க முயற்சி செய்தோம். ஆனால் படுக்கை வசதி இல்லை என்பதால் அது முடியாமல் போய்விட்டது" என்று தாயின் மரணம் குறித்து அந்த இடத்திலேயே சஹா அழுதுகொண்டு பேசும் வீடியோ காட்சிகள் பார்ப்பவர்களை கலங்க வைக்கிறது.

சஹாவின் நிலைமை அவரொருவருக்கு மட்டும் ஏற்பட்ட நிகழ்வு மட்டுமல்ல, டெல்லியில் பல்வேறு நபர்களின் நிலை இதுவாக தான் இருக்கிறது. ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் கொரோனா காரணமாக ஒரு மரணம் தேசிய தலைநகரில் பதிவாகி வருகிறது எனக் கூறப்படுகிறது. அதேபோல், கொரோனா பாதிப்பில், டெல்லி 32 சதவிகிதத்திற்கும் அதிகமான கொரோனா பாசிடிவிட்டி விகிதத்தைக் கொண்டுள்ளது. இதன் விளைவாக அனைத்து மருத்துவமனைகளிலும் கூட்டம் நிரம்பி வழிகின்றன.

இதற்கிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசாங்கம் ஆக்ஸிஜன் தேவையை 780 மெட்ரிக் டன்னாக இருக்கும் என்றும் கணித்துள்ளது. ஏனெனில் பல மருத்துவமனைகள் கடந்த இரண்டு வாரங்களாக மருத்துவ ஆக்ஸிஜனின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொண்டன. ஆனால் அந்த மருத்துவமனைகளுக்கு 490 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக கூறுகிறது ஒரு தரவு. நிலைமை மோசமாகி வருவதன் எடுத்துக்காட்ட சஹா போன்றவர்கள் அவதிப்படும் சம்பவங்கள் ஆகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com