ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்த கொரோனா நோயாளிகள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்: டெல்லி அரசு

ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்த கொரோனா நோயாளிகள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்: டெல்லி அரசு

ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்த கொரோனா நோயாளிகள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்: டெல்லி அரசு
Published on

ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்த கொரோனா நோயாளிகளின் குடும்பங்களுக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க டெல்லி அரசு உத்தரவிட்டிருக்கிறது.

ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இறந்த கோவிட் 19 நோயாளிகளின் குடும்பங்களுக்கு டெல்லி அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை வழங்கும் என அறிவித்திருக்கிறது. டெல்லி அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழு, நோயாளிகள் மரணம் மற்றும் மரணத்திற்கான காரணங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இந்த தொகை வழங்கப்படும்.

கோவிட்-19 காரணமாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கெனவே ரூபாய் 50,000 இழப்பீட்டுத் தொகையாக வழக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்திருக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்களுக்கு இந்த தொகை கூடுதலாக கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com