டெல்லியில் கடும் பனிமூட்டம்: 15 ரயில்கள் தாமதம், 12 ரத்து!

டெல்லியில் கடும் பனிமூட்டம்: 15 ரயில்கள் தாமதம், 12 ரத்து!
டெல்லியில் கடும் பனிமூட்டம்: 15 ரயில்கள் தாமதம், 12 ரத்து!

டெல்லியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதன் காரணமாக, 15 ரயில்கள் தாமதமாகவும், 12 ரயில்கள் ரத்தும் செய்யப்பட்டுள்ளன. 

டெல்லியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் பனிப்பொழிவால் குளிர்ந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வானிலை ஆய்வுப்படி அங்கு அதிகபட்ச வெப்பநிலை 19.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. குறைந்த பட்சம் 7.3 டி.செ ஆகவும், பொதுவாக 4 டி.செ-க்கு குறைவாகவும், பருவகால அடிப்படையில் சராசரியாக 1 டி.செ குறைவான வெப்பநிலை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வானிலை ஆய்வு மைய தகவல்படி இன்று காலையில் டெல்லியில் 94 சதவித ஈரப்பதம் பதிவாகியுள்ளது. உத்தரகாண்ட், ஜம்மு-காஷ்மீர் மற்றும் இமாச்சலப்பிரதேசத்தில் பொழியும் மழையின் காரணமாக இந்த குளிர்ந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடும் பனிப்பொழிவு காரணமாக டெல்லியில் இன்று 15 ரயில்கள் தாமதமாகவும், 12 ரயில் ரத்தும் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 2 ரயில்களின் பயண நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com