\
கொரோனா எதிரொலி: டெல்லியில் அரசு, தனியார் பள்ளிகளை மூட முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவு

கொரோனா எதிரொலி: டெல்லியில் அரசு, தனியார் பள்ளிகளை மூட முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவு

கொரோனா எதிரொலி: டெல்லியில் அரசு, தனியார் பள்ளிகளை மூட முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவு
Published on

டெல்லியில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதாவது, “ கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் டெல்லியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை மூடப்படுகிறது” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இந்தியாவில் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டிய நிலையில் டெல்லியில் நேற்று 7,427 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 24 பேர் பலியாகினர் . அங்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com