சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால்... முதல்வரின்றி கூடும் டெல்லி சட்டமன்ற சிறப்புக்கூட்டம்!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் உள்ள நிலையில், டெல்லி சட்டமன்றத்தின் சிறப்புக்கூட்டம் இன்று கூடுகிறது.
டெல்லி சட்டமன்ற சிறப்புக்கூட்டம்
டெல்லி சட்டமன்ற சிறப்புக்கூட்டம்முகநூல்

புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வாரம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து 7 நாட்கள் விசாரணை காவலில் வைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்தவாறு துறை அமைச்சர்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

இந்நிலையில், இன்று டெல்லி சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடர் கூடவுள்ளது. இதில் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த விவாதங்கள் நடைபெறும் எனவும் குறிப்பாக இலவச மருத்துவம், மொஹல்லா கிளினிக் இலவச சிகிச்சை உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சட்டமன்ற சிறப்புக்கூட்டம்
மக்களவை தேர்தல்: வேட்பாளர்களைத் தொடர்ந்து கட்சிகளும் விலகல்.. 3 மாநிலங்களில் பாஜக தனித்துப் போட்டி?

இதனிடையே, தாம் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com