டெல்லி: ஆயுதங்களைக் காட்டி பெட்ரோல் பங்க்-கில் கொள்ளையடித்த மர்மநபர்கள்.. வைரல் வீடியோ!

டெல்லியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றை, ஆயுதமேந்திய கொள்ளையர்கள் சூறையாடிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Delhi
Delhitwitter

சுமார் 6 கொள்ளையர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கி ஆயிரக்கணக்கான ரூபாய் பணத்தை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதை வீடியோவில் காணலாம். இந்த சம்பவத்தின்போது மர்மநபர்கள் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டனர் .முண்ட்கா கெவ்ரா மோட் பெட்ரோல் பங்க்கில் இந்த சம்பவம் நடந்துள்ளது

டெல்லி முண்ட்கா கெவ்ரா மோட் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு கடந்த அக்டோபர் 11ஆம் தேதி இரவு 1.30 மணியளவில் முகமூடி அணிந்த 6 பேர், பெட்ரோல் பங்க்கை நெருங்கி, அங்கிருந்த ஊழியரிடம் தங்களுடைய பைக்கில் பெட்ரோல் நிரப்பச் சொல்கிறார்கள். பின்னர், அவருடன் உள்ளே சென்று பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

பெட்ரோல் பங்க்கில் கொள்ளையடித்தபோது மர்ம நபர்கள் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு, அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றபோது பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் தடுத்துள்ளார். இதனால், அவரை மர்ம நபர் துப்பாக்கியால் தலையில் தாக்கியுள்ளார். எனினும், கொள்ளையர்கள் இரண்டு பைக்குகளில் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இந்த காட்சிகள், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

துப்பாக்கியால் சுடப்பட்ட ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: உ.பி.: பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பிக்க ஓடிய சிறுமி.. ரயில்முன் தள்ளி கொலை செய்ய முயற்சி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com