தேவையா இது..? ஆன்லைன் சபலத்தால் பணத்தை இழந்த சோகம் - நடந்தது என்ன?

தேவையா இது..? ஆன்லைன் சபலத்தால் பணத்தை இழந்த சோகம் - நடந்தது என்ன?
தேவையா இது..? ஆன்லைன் சபலத்தால் பணத்தை இழந்த சோகம் - நடந்தது என்ன?

கூடுதலாக ரூ.10,000 கொடுக்கும்படியும், கொடுக்காவிட்டால் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்க வைத்து விடுவதாகவும் மிரட்டியுள்ளது அக்கும்பல்.  

டெல்லியில் மருத்துவமனை ஒன்றில் கதிரியக்க நிபுணராக பணியாற்றிவரும் நபர் ஒருவர், இணையதளங்களில் கால் கேர்ள்ஸ்-களின் தொடர்பு எண்களை தேடியதில் ஒரு பெண்ணின் எண் அவருக்குக் கிடைத்துள்ளது. அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசிய அவர், அப்பெண்ணை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு கூறியிருக்கிறார். அதன்படி காரில் தனது கூட்டாளிகளுடன் வந்த அந்த பெண், அந்நபரை காரில் அமரச்சொல்லி  இருக்கிறார்.

காரில் அமர்ந்ததும் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க ரூ.25,000 பணம் கேட்டுள்ளனர். இ-வாலட் மூலமாக பணத்தை அனுப்பியதும், காரில் இருந்தவர்கள் மருத்துவமனை ஊழியரை மிரட்டத் தொடங்கியிருக்கின்றனர். கூடுதலாக ரூ.10,000 கொடுக்கும்படியும், கொடுக்காவிட்டால் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்க வைத்து விடுவதாகவும் அந்நபரை மிரட்டியுள்ளனர். ஆனால் அதற்கு பணியாத அந்நபர் பணம் தரமுடியாது எனக் கூறியுள்ளார். இதையடுத்து காரில் இருந்த நபர்கள் அவரை காரிலிருந்து இறக்கிவிட்டு தப்பிவிட்டனர்.

ஜனவரி 7ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து, நேற்று முன்தினம்தான் (செவ்வாய்க்கிழமை) பாதிக்கப்பட்ட நபர், செக்டார் 40 காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் இச்சம்பத்தில் தொடர்புடைய பவன், மோஹித், சுனில் மற்றும் தீப்ஷிகா ஆகிய நான்கு பேரை கண்டறிந்து புதன்கிழமை மாலை கைது செய்தனர். கதிரியக்க நிபுணரிடம் இருந்து பெறப்பட்ட 25,000 ரூபாயை அவரிடமே திரும்ப வழங்கியதைத் தொடர்ந்து, அவர்களை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com