டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறை : இதுவரை 84 பேர் கைது!

டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறை : இதுவரை 84 பேர் கைது!
டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறை : இதுவரை 84 பேர் கைது!

டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறை தொடர்பாக இதுவரை 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, 2 மாதங்களுக்கு மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். குடியரசுத் தினத்தன்று டெல்லியில் நடைபெற்ற டிராக்டர் பேரணியின் போது வன்முறை ஏற்பட்டது. இதுதொடர்பாக 38 முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்துள்ள காவல்துறையினர், 84 பேரை கைது செய்துள்ளனர்.

பொதுமக்கள் சார்பில் வன்முறை தொடர்பான 1700 மொபைல் போன் காட்சிகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனிடையே காந்தி நினைவுநாளான நேற்று, விவசாயிகள் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். அங்கு கலவரம் ஏதும் ஏற்படாத வகையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். சிங்கு, காஜிபூர், டிக்ரி பகுதிகளிலும், ஹரியானாவின் 17 மாவட்டங்களிலும் இன்று இரவு வரை இணையசேவை தடை செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழந்தது தொடர்பாக தவறான தகவல்களை பதிவிட்டதாக, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மற்றும் சில பத்திரிகையாளர்கள் மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com