இந்தியா
பிறந்து 2 மாதங்களே ஆன பெண் குழந்தையை 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற தந்தை
பிறந்து 2 மாதங்களே ஆன பெண் குழந்தையை 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற தந்தை
டெல்லியைச் சேர்ந்த ஒரு தந்தை, இரு மாற்றுத்திறனாளி பெண் குழந்தைகளுக்கு மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்காக பிறந்து இரண்டு மாதங்களே ஆன தன் பெண் குழந்தையை விற்ற சம்பவம் கவலையளிப்பதாக உள்ளது.
அந்த ஏழைத் தந்தையால் பலமுறை விற்கப்பட்ட பெண் குழந்தையை டெல்லி பெண்கள் ஆணையம் மற்றும் டெல்லி காவல்துறையினர் பத்திரமாக மீட்டு தாயுடன் சேர்த்துள்ளனர்.
டெல்லியில் உள்ள ஹெவுஸ் குவாஸி பகுதியில் குழந்தை மீட்கப்பட்டது. அந்தப் பெண் குழந்தை 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டதாக மகிளா பஞ்சாயத்து மூலம் தகவல் கிடைத்தது. முதலில் ஜப்ராபாத் பகுதியில் மனிஷா என்பவரிடம் குழந்தை விற்கப்பட, பின்னர் அவர் சஞ்சய் மிட்டல் என்பவரிடம் 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.