\
விவசாயிகள் முன்னேறுவதை தடுக்க நடவடிக்கை: சாலையில் ஆணிகளை பதித்த காவல்துறை!

விவசாயிகள் முன்னேறுவதை தடுக்க நடவடிக்கை: சாலையில் ஆணிகளை பதித்த காவல்துறை!

விவசாயிகள் முன்னேறுவதை தடுக்க நடவடிக்கை: சாலையில் ஆணிகளை பதித்த காவல்துறை!
Published on

டெல்லி - உத்தரபிரதேசம் எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து முன்னேறுவதை தடுக்கும் விதமாக சாலையில் இரும்பு முட்களை சாலையில் பதித்துள்ளனர் டெல்லி போலீசார்

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை விவசாயிகள் தலைவர்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையே 12 முறை நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.

இதனையடுத்து, ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் சில வன்முறைகள் நடந்தன, ஒரு விவசாயி உயிரிழந்தார். டிராக்டர் அணிவகுப்பில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காணாமல் போயுள்ளதாக பஞ்சாப் மனித உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது. தொடர்ந்து விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்துவண்ணம் உள்ளது.

டெல்லி-உத்தரபிரதேசம் எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து முன்னேறுவதை தடுக்கும் விதமாக காசிபூர் பகுதி சாலையில் இரும்பு முட்களை சாலையில் பதித்துள்ளனர் டெல்லி போலீசார். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com