திருமண நாள் பரிசாக.... கணவனையும், மாமியாரையும் கொல்ல முயன்ற பெண்.....

திருமண நாள் பரிசாக.... கணவனையும், மாமியாரையும் கொல்ல முயன்ற பெண்.....

திருமண நாள் பரிசாக.... கணவனையும், மாமியாரையும் கொல்ல முயன்ற பெண்.....
Published on

டெல்லியில் தகாத உறவை துண்டிக்க கூறிய கணவன் மற்றும் மாமியாரின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற மருமகளை போலீசார் கைது செய்தனர். 

டெல்லியில் உள்ள ஜெஹாங்கீர்புரி பகுதியைச் சேர்ந்தவர் மீனாக்ஷி. இரண்டு குழந்தைக்குத் தாயான இவர் தனது உடலை சீராக வைத்துக்கொள்ள அதே பகுதியில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் சேர்ந்தார். இங்கு பயிற்சியாளராக இருக்கும் அப்துல் என்பவருடன் நட்பு ஏற்படுத்திக் கொண்ட மீனாக்ஷி, நாளிடைவில் அவரை காதலிக்க தொடங்கினார். இதற்கு அப்துலும் சம்மதித்த நிலையில், தனது குழந்தைகளைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல் மீனாக்ஷி அவருடன் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளார். இதுகுறித்து மீனாக்ஷியின் கணவருக்கு தெரிய வந்ததால், அவர் மீனாக்ஷியை கண்டித்துள்ளார். இந்நிலையில் திருமண நாள் வந்ததால் இருவரும் அனைத்தையும் மறந்து இருவரும் அதனை கொண்டாடியுள்ளனர். வீட்டில் உள்ள அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. உணவில் அனைவருக்கும் மயக்க மருந்தை கலந்த மீனாக்ஷி அவர்கள் சுயநினைவை இழக்கும் வரை காத்துக்கொண்டிருந்தார். மாமனார், மாமியார், கணவன், இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 8பேரும் சுயநினைவை இழந்த நிலையில், கணவன் மற்றும் மாமியாரின் தொண்டையை மீனாக்ஷி இரக்கமின்றி அறுத்தார். இதனைத்தொடர்ந்து எஞ்சியவர்களையும் கொலை செய்ய மீனாக்ஷி முயல்வதற்குள் சத்தம் கேட்டு சிலர் அவரின் வீட்டிற்கு வந்ததால், திருடர்கள் வந்து இவ்வாறான செயலில் ஈடுபட்டு தப்பிவிட்டதாக அவர் உறவினர்களிடம் நாடகமாடினார். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட மீனாக்ஷி, அப்துல் குறித்து காவல்துறையில் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com