டெல்லியில் நூதன முறையில் தாய்-மகள்கள் தற்கொலை- போலீஸாரின் உயிரை காக்க எச்சரிக்கை கடிதம்

டெல்லியில் நூதன முறையில் தாய்-மகள்கள் தற்கொலை- போலீஸாரின் உயிரை காக்க எச்சரிக்கை கடிதம்
டெல்லியில் நூதன முறையில் தாய்-மகள்கள் தற்கொலை- போலீஸாரின் உயிரை காக்க எச்சரிக்கை கடிதம்

டெல்லியில் நூதன முறையில் தாயும், அவரது இரு மகள்களும் தற்கொலை செய்து கொண்டனர். இதனிடையே, வீட்டுக்குள் வரும் போலீஸாரின் உயிரை காக்க எச்சரிக்கை கடிதத்தையும் அவர்கள் எழுதி வைத்துள்ளனர்.

டெல்லியின் வசந்த் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் அமர் குமார். தொழிலதிபரான இவர், தனது மனைவி மஞ்சு (45) மற்றும் மகள்கள் ஹன்சிகா (19) அன்க்கு (17) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமர் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அமர் குமாரின் மறைவு அவரது மனைவி மற்றும் மகள்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், அவர் இறந்த பிறகு குடும்பம் நடத்த போதிய வருமானமும் அவர்களுக்கு இல்லை எனத் தெரிகிறது. இதனால் கடந்த ஒரு மாதமாக அவர்கள் கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் அவர்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர். அதன்படி, நேற்று முன்தினம் தங்கள் வீட்டின் ஜன்னல்கள் மற்றும் அனைத்து துவாரங்களையும் அவர்கள் பாலித்தீன் கவர்களை கொண்டு இறுக்கமாக மூடியுள்ளனர்.

பிறகு, வீட்டின் இருந்த சமையல் கேஸ் சிலிண்டரை அவர்கள் திறந்து விட்டுள்ளனர். இதில் சிறிது நேரத்திலேயே சிலிண்டரில் இருந்த வாயு வெளியேறி வீடு முழுவதும் நிரம்பியது. இதனால் மூச்சுவிட முடியாமல் அவர்கள் மூவரும் உயிரிழந்தனர்.

இதனிடையே, இரண்டு தினங்களாக கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் அங்கு வந்த போலீஸார், வீட்டின் கதவை உடைத்துவிட்டு உள்ளே சென்றனர்.

அப்போது வாசலிலேயே ஒரு கடிதம் எழுதியிருந்தது. அதில், "எங்கள் தற்கொலைக்கு யாரும் காரணம் அல்ல. வீடு முழுவதும் கார்பன் மோனாக்சைடு வாயு நிரம்பியுள்ளது. எனவே யாரும் தீயை பொருத்தவோ, சுவிட்ச்களை ஆன் செய்யவோ வேண்டாம். பாலித்தின் கவர்களை அப்புறப்படுத்தி வீட்டில் காற்றோட்டத்தை கொண்டு வாருங்கள். சிறிய தவறும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்" என எழுதப்பட்டிருந்தது.

தாங்கள் உயிரிழந்த போதிலும் மற்றவர்களை உயிரை காப்பாற்றுவதற்காக அவர்கள் கடிதம் எழுதியிருந்தது போலீஸாரை நெகிழ்ச்சி அடைய செய்தது. இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com