\
மனைவி மீது சந்தேகம்.. 30 முறை கத்தியால் குத்திய கணவன்

மனைவி மீது சந்தேகம்.. 30 முறை கத்தியால் குத்திய கணவன்

மனைவி மீது சந்தேகம்.. 30 முறை கத்தியால் குத்திய கணவன்
Published on

மனைவி மீது சந்தேக பார்வை கொண்ட கணவர் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

டெல்லியை சேர்ந்தவர் வினோத். வயது 43. திருமணங்களை ஏற்பாடு செய்யும் சிறிய நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். வினோத்திற்கு தன் மனைவி மீது அடிக்கடி சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு வேறு யாருடனும் தகாத உறவு இருக்குமோ என பலமுறை சந்தேகத்தில் குழம்பியிருக்கிறார் வினோத். இதுதொடர்பாக நேற்றிரவு தம்பதிக்குள் வாக்குவாதம் ஏற்படவே மனைவியை ஆத்திரத்தில் கத்தியால் குத்திருக்கிறார் வினோத். ஆத்திரமும், சந்தேகமும் குறையாததால் தொடர்ச்சியாக 30 முறை கத்தியால் குத்திவிட்டு அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார் வினோத். அப்போது பக்கத்திலிருந்த அவரின் மகனுக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது. இரத்த வெள்ளத்தில் கிடந்த தனது அம்மாவை மீட்ட வினோத்தின் மகன், அவரை அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். ஆனால் ஏற்கனவே அப்பெண் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மனைவியை கொலை செய்த வினோத்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com