திடீரென மெசேஜ் பண்ணுவதை நிறுத்தியதால் ஆத்திரம்.. பள்ளி மாணவியை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்

திடீரென மெசேஜ் பண்ணுவதை நிறுத்தியதால் ஆத்திரம்.. பள்ளி மாணவியை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்

திடீரென மெசேஜ் பண்ணுவதை நிறுத்தியதால் ஆத்திரம்.. பள்ளி மாணவியை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்
Published on

சமூக ஊடங்களில் பழகிய 11ஆம் வகுப்பு மாணவி தனக்கு மெசேஜ் அனுப்புவதை நிறுத்தியதால் கோபமடைந்த இளைஞர் மாணவியை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.

டெல்லியின் சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்த 16 வயது 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் அர்மான் அலி என்பவருடன் சமூக ஊடகம் மூலம் நட்பாகி பேசி வந்துள்ளார். இரண்டு வருடங்களாக சமூக ஊடகம் வழியாகவே பேசி பழகிவந்த அந்த மாணவி திடீரென அர்மான் அலியுடன் பேசுவதை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அர்மான், தனது கூட்டாளிகளான பாபி மற்றும் பவன் ஆகியோருடன் சேர்ந்துகொண்டு மாணவி பள்ளிக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது பின்புறமாக நின்று துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடியுள்ளனர். இதில் மாணவியின் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்குப்பிறகு அந்த சிறுமி தற்போது நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

அர்மானின் கூட்டாளிகளான பாபி மற்றும் பவனை கைதுசெய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இந்த தகவல்கள் தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து மூவர் மீதும் கொலை முயற்சி என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தப்பியோடிய அர்மானை போலீசார் தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com