\
மனைவியுடன் லாட்ஜில் தங்கியிருந்த ஆண் நண்பர் - ஆத்திரத்தில் கணவர் செய்த செயல்

மனைவியுடன் லாட்ஜில் தங்கியிருந்த ஆண் நண்பர் - ஆத்திரத்தில் கணவர் செய்த செயல்

மனைவியுடன் லாட்ஜில் தங்கியிருந்த ஆண் நண்பர் - ஆத்திரத்தில் கணவர் செய்த செயல்
Published on

தனது மனைவியை லாட்ஜுக்கு அழைத்துச் சென்ற ஆண் நண்பரை அவரது கணவர் சுட்டுக் கொன்ற சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்தவர் ரிஷப் சக்சேனா (32). தொழிலதிபரான இவருக்கும், ரவ்லீன் சாவ்லா என்ற பெண்ணுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்துக்கு பிறகும் கூட, ரல்வீன் சாவ்லா தனது ஆண் நண்பரான சன்னி ஷெராவத்துடன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இது, அவரது கணவர் ரிஷப்புக்கு பிடிக்கவில்லை. இதுதொடர்பாக பல முறை அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, ரிஷப் சக்சேனா பணி நிமித்தமாக கடந்த வாரம் வெளியூர் புறப்பட்டார். டெல்லி திரும்ப 15 நாட்கள் ஆகும் என அவர் கூறி சென்றிருக்கிறார். அவர் வெளியூர் சென்றதும், சன்னி ஷெராவத்தும், ரவ்லீன் சாவ்லாவும் ஹோட்டல், சினிமா என பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு இமாச்சலப் பிரதேச மாநிலம் மணாலியில் உள்ள சொகுசு ஓட்டலில் உள்ள லாட்ஜில் இருவரும் தங்கியுள்ளனர். இந்த விஷயம் ரிஷப் சக்சேனாவுக்கு தெரியவந்திருக்கிறது.

இதையடுத்து, விமானம் மூலம் நேற்று டெல்லி வந்த ரிஷப், நேராக அந்த ஓட்டலுக்கு சென்றிருக்கிறார். பின்னர் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றபோது, அவர்கள் இருவரும் தனிமயைில் இருப்பதை ரிஷப் பார்த்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரிஷப், தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து இருவரையும் சரமாரியாக சுட்டார். இதில் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே சன்னி ஷெராவத் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, தன்னை தானே அவர் சுட்டு ரிஷப் தற்கொலை செய்து கொண்டார்.

ரவ்லீன் சாவ்லாவுக்கு கையில் துப்பாக்கி குண்டு பட்டதால் அவர் உயிர் தப்பினார். துப்பாக்கி சத்தம் கேட்டு அங்கு வந்த ஊழியர்கள், அங்கு நடந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரவ்லீன் சாவ்லாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com