\
தம்பியை கொன்றுவிட்டு நோயால் இறந்ததாக நாடகம் : விசாரணையில் வெளிவந்த உண்மை..!

தம்பியை கொன்றுவிட்டு நோயால் இறந்ததாக நாடகம் : விசாரணையில் வெளிவந்த உண்மை..!

தம்பியை கொன்றுவிட்டு நோயால் இறந்ததாக நாடகம் : விசாரணையில் வெளிவந்த உண்மை..!
Published on

அண்ணனே தம்பியை கொன்றுவிட்டு நோயால் இறந்ததாக நாடகமாடிய நிலையில், அதை விசாரணையில் போலீஸார் கண்டுபிடித்த சம்பவம் டெல்லியில் நிகழ்ந்துள்ளது.

டெல்லியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் சுரேந்தர் குமார். இவர் அண்மையில் வீட்டில் மயங்கி நிலையில் உயிரிழந்தார். அவருக்கு நீண்ட நாட்களாக நுரையீரல் நோய் இருந்தது. அவர் நுரையீரல் நோயால் மயங்கி விழுந்து இறந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

விசாரணையில் அவருக்கு தீவிரமான நுரையீரல் நோய் இருந்தது உறுதியானதால், போலீசார் வேறு கோணத்தில் விசாரிக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. சுரேந்தர் குமாருக்கு நுரையீரல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது உண்மை என்றாலும், அவரது தலையில் சில காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த தகவலை போலீசாருக்கு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து சுரேந்தர் மரணத்தில் சந்தேகமடைந்த போலீசார், குடும்பத்தினரிடம் கிடிக்கிப்பிடி விசாரணையை நடத்தினர். அதில் சுரேந்தரை அவரது அண்ணனே கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது அண்ணனை போலீசார் கைது செய்தனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com