Delhi girl’s murder
Delhi girl’s murderTwitter

சிறுமியை 20 முறை கத்தியால் குத்திய இளைஞர் - கண்டும் காணாதது போல் சென்ற மனிதநேயமற்ற மக்கள்! #CCTV

டெல்லியில் 16 வயது சிறுமி கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டதன் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

டெல்லி ஜேஜே காலனியில் 16 வயது சிறுமியை ஒரு இளைஞர் கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை 20 - 30 முறை கத்தியால் குத்தியும் ஆத்திரம் தீராமல் அந்த இளைஞர் ஒரு பெரிய கல்லை எடுத்து சிறுமியின் தலையில் மீண்டும் மீண்டும் தூக்கிப்போடுகிறார்.

Murder
MurderPixabay

இதனால் அந்த சிறுமி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இவை அனைத்தும் சிசிடிவியில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அவ்வழியே சென்றவர்கள் இந்த கொடூரமான தாக்குதலை கண்டும் காணாதது போல் சென்றது, இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

சிறுமியை கொலை செய்துவிட்டு தப்பிய நபரை போலீசார் தேடி வந்தனர். முதற்கட்டமாக காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், கொலையாளியை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கொலை செய்த ஷாஹில்
கொலை செய்த ஷாஹில்

ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளி தேடப்பட்டு வந்த நிலையில், தற்போது இளைஞர் ஷாஹில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக பதிவான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்:

(Caution: VERY VERY SENSITIVE CONTENT ATTACHED)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com