108 அடி அனுமன் சிலையை இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை

108 அடி அனுமன் சிலையை இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை

108 அடி அனுமன் சிலையை இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
Published on

டெல்லியில் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டுள்ள 108 அடி உயரமுள்ள அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் தூக்கி இடமாற்றம் செய்வது குறித்து பரிசீலிக்குமாறு டெல்லி மாநகராட்சிக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

டெல்லியில் கரோல் பாக் பகுதியில் 108 அடி உயரமுள்ள அனுமன் சிலை உள்ளது. மெட்ரோ ரயிலில் செல்லும் போது இந்த சிலை நன்றாக தெரியும். டெல்லியின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்டது. சென்னையில் எல்.ஐ.சி கட்டடத்தை சினிமாக்களில் காட்டுவது போல், டெல்லியை காட்டும் போது அனுமான் சிலை நிச்சயம் இடம்பெறும். அந்த அளவிற்கு அனுமன் சிலை பிரபலமாக மாறிவிட்டது.

இந்த நிலையில், கரோல் பாக் பகுதியில் அங்கீகாரமற்ற கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஒரு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை தலைமை நீதிபதி கீதா மிட்டல், நீதிபதி ஹரி சங்கர் ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று விசாரித்தது. 

அப்போது நீதிபதிகள் கூறுகையில், “அனுமன் சிலையை சுற்றி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் தூக்கி இடமாற்றம் செய்வது குறித்து அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும்” என்று கூறினர். மேலும் இந்த நடவடிக்கை மக்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கின் விசாரணையை 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com