Arvind Kejriwalpt desk
இந்தியா
டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு பிணை கிடைக்குமா? - டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலின் பிணை வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் பிணை கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அவருக்கு பிணை வழங்கியது. இதையடுத்து அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் கெஜ்ரிவாலின் பிணையை ரத்து செய்தது.
Delhi High CourtFile Image
இதனை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என தெரிவித்தது. அதேசமயம் இவ்வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கலாம் என நீதிபதிகள் கூறினர். இந்நிலையில், கெஜ்ரிவாலின் பிணை வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
பாஜக கூட்டணி ஆட்சி அமைந்த 15 நாட்களில் 10 விரும்பத்தகாத சம்பவங்கள்.. பட்டியலிட்டு விமர்சித்த ராகுல்!
கெஜ்ரிவாலுக்கு பிணை கிடைக்குமா, அவர் சிறையில் இருந்து வெளியே வருவாரா என ஆம் ஆத்மி தொண்டர்கள் எதிர்பார்த்துள்ளனர்.