அனில் அம்பானிக்கு எதிரான திவால் நடவடிக்கையை நிறுத்திய டெல்லி உயர்நீதிமன்றம்

அனில் அம்பானிக்கு எதிரான திவால் நடவடிக்கையை நிறுத்திய டெல்லி உயர்நீதிமன்றம்
அனில் அம்பானிக்கு எதிரான திவால் நடவடிக்கையை நிறுத்திய டெல்லி உயர்நீதிமன்றம்

இந்தியாவின் நெம்பர் 1 பணக்காரரின் தம்பியான ரிலையன்ஸ் குழுமத்தின் (Reliance Infrastructure) தலைவர் அனில் அம்பானிக்கு எதிரான திவால் நடவடிக்கையை நிறுத்தியுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். 

தன் அப்பாவின் மறைவையடுத்து அம்பானி சகோதரர்கள் தனித்தனியே பிரிந்து தொழில் செய்ய துவங்கினர். அம்பானி சகோதரர்களில் இளையவரான அனில் அம்பானி ரிலையன்ஸ் கம்யூனிகேஷனை 2002 இல் தொடங்கினார். 

2016இல் ஜியோவின் வருகையை அடுத்து சரிவை சந்திக்க துவங்கியது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ். 

நிதி சிக்கலை சமாளிக்க எஸ்.பி.ஐ வங்கியில் 1200 கோடி ரூபாய் கடன் வாங்கினார் அனில் அம்பானி. அதற்கு 160 மில்லியன் டாலர்களுக்கு தனிப்பட்ட முறையில் உத்திரவாதம் கொடுத்திருந்தார்.

ஆனால் கேடு தேதி நெருங்கியும் அனில் கடன் தொகையை திருப்பி செலுத்தாத நிலையில் மும்பையிலுள்ள தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த சூழலில் அவரது சொத்துகளை ஜப்தி செய்யும் திவால் சட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். 

அதோடு தனிப்பட்ட சொத்துகளை விற்பது மற்றும் மாற்றுவதற்கும் தடை விதித்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com