\
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு : ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு : ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு : ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு
Published on

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் 86 நாட்களாக சிறையில் உள்ளார். இந்த விவகாரத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

அந்த மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. பொருளாதார குற்ற வழக்கில் ஒருவருக்கு ஜாமீன் வழங்கினால் அது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிபிஐ வழக்கில் ஏற்கெனவே அவர் ஜாமீன் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com