ஃப்ளிப்கார்ட், அமேசான் ஆகிய நிறுவனங்கள் விதிகளை மீறுவதாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம், மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள் அந்நிய முதலீட்டு விதிகளை மீறி பொருட்களை விற்பனை செய்து வருவதாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. மேலும் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது, வரும் நவம்பர் 11ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். TELECOM WATCHDOG என்ற தொண்டு நிறுவனம் இதுதொடர்பாக பொது நல மனு தாக்கல் செய்திருந்தது.
இதில் வேறு ஒரு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி உற்பத்தியாளர்களிடம் குறைந்த விலையில் பொருட்களை வாங்கி அவற்றை அமேசானும் ஃப்ளிப்கார்ட்டும் வாடிக்கையாளர்களுக்கு விற்று வருவதாக அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. இது விதிமுறைகளுக்கு எதிரானது என்பதுடன் சிறு வணிகர்களையும் பாதிப்பதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்கள் தமது நிதியுதவியுடன் எக்சேஞ்ச் ஆஃபர், தவணை திட்டம், வங்கி சலுகை உள்ளிட்ட வழிகளில் பொருள் விற்பனை மேற்கொள்வதாகவும் இது அந்நிய முதலீட்டு விதிகளுக்கு எதிரானது என்றும் அம்மனுவில் கூறப்பட்டுள்ளது