இந்தியா
“மன்னிப்பு கேட்டால் தான் விடுவோம்” - ஆடிட்டர் குருமூர்த்திக்கு டெல்லி உயர்நீதிமன்றம் காட்டம்
“மன்னிப்பு கேட்டால் தான் விடுவோம்” - ஆடிட்டர் குருமூர்த்திக்கு டெல்லி உயர்நீதிமன்றம் காட்டம்
மன்னிப்பு கோரினால்தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவீர்கள் என ஆடிட்டர் குருமூர்த்தியிடம் டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஊழல் வழக்கில் கார்த்திக் சிதம்பரத்திற்கு ஆதரவான உத்தரவினை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் வழங்கியதற்கு காரணம், அவர் ப.சிதம்பரத்திடம் வழக்கறிஞராக வேலை பார்த்தவர் என்பதால் தான் என ஆடிட்டர் குருமூர்த்தி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் குருமூர்த்திக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து விலக்கு வேண்டுமென்றால், நீதிமன்றத்தில் மன்னிப்பு கோர வேண்டும் என நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.