டெல்லி சுகாதாரத்துறை அமைச்சரின் தந்தை கொரோனாவால் மரணம்
டெல்லி சுகாதாரத்துறை அமைச்சரின் தந்தை, கொரோனாவால் இன்று உயிரிழந்திருக்கிறார்.
டெல்லியில் கொரோனாவின் தீவிரம், ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது. உயிரிழப்பு விகிதம், உயிரிந்த பின்னரும் மயானத்தில் இடம் கிடைக்காத கொடுமை என கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் மிக மோசமாக இருக்கிறது.
அதிகாரமோ, பணமோ கொரோனாவை தடுக்கவோ குணப்படுத்தவோ முடியாது என்பதை நமக்கு மீண்டுமொரு முறை உணர்த்தும்விதமாக, டெல்லியில் மற்றுமொரு சம்பவம் நடந்தேறியுள்ளது. டெல்லி சுகாதாரத்துறை அமைச்சரின் தந்தையே, இன்று கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்.
இதற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "நம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் தந்தை, கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார். அவரின் இறப்பு, மிகவும் வருத்தமளிக்கும் செய்தியாக இருக்கிறது. சத்யேந்திரா, டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்த, நேரம் காலம் பார்க்காமல் உழைத்தவர்.
அவர் தந்தையின் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன். அவரின் குடும்பத்துக்கு, என் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.