`ரூ.1 கோடி வைப்பு தொகையை செலுத்திவிட்டு செல்லலாம்’-நடிகை ஜாக்குலினுக்கு நீதிமன்றம் உத்தரவு

`ரூ.1 கோடி வைப்பு தொகையை செலுத்திவிட்டு செல்லலாம்’-நடிகை ஜாக்குலினுக்கு நீதிமன்றம் உத்தரவு
`ரூ.1 கோடி வைப்பு தொகையை செலுத்திவிட்டு செல்லலாம்’-நடிகை ஜாக்குலினுக்கு நீதிமன்றம் உத்தரவு

சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் தொடர்புடைய நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், 1 கோடி ரூபாய் வைப்பு தொகையை செலுத்திவிட்டு வெளிநாடு செல்லலாம் என டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

தனியார் மருந்து நிறுவனத்தின் உரிமையாளரை மிரட்டி 200 கோடி பணம் பறித்த வழக்கில் திகார் சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்துவந்த நிலையில், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸூடன் சுகேஷ் சந்திரசேகர் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் சில வெளியானது. அதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்களை சுகேஷ் சந்திரசேகர் ஜாக்குலினுக்கு கொடுத்துள்ளார் என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ஜாக்குலினிடம் தீவிர விசாரணை செய்யப்பட்டது. அப்போது கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி ஜாக்குலின் மஸ்கட் தப்பி செல்ல முயன்றார். அதில் மும்பையில் விமான நிலைய பாதுகாப்பு ஊழியர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார் அவர். மேலும் வெளிநாடு தப்பி செல்லாத வகையில் 'லுக் அவுட் நோட்டிஸ்' அவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் (IIFA) ஐ.ஐ.எப்.ஏ விருது வழங்கும் விழாவுக்கு செல்ல அனுமதி கோரி ஜாக்குலின் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுதிர் குமார் ஜெயின், அமலாக்கத்துறை தரப்பிலான வாதங்களை இன்று கேட்டறிந்தார்.

அதில் `விசாரணை தவிர்ப்பதற்காக அவர் வெளிநாடு செல்லாம் என்பதால் அனுமதி வழங்க கூடாது’ என அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது நீதிபதி, “ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு ஜாக்குலின் பெர்னாண்டஸ் மே 31 - ஜூன் 6 வரை செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. வெளிநாடு செல்வதற்கு முன்பு 1 கோடி ரூபாய் வரை அவர் வைப்புத் தொகை செலுத்த வேண்டும். வெளிநாடு சென்று குறிப்பிட்ட காலத்தில் திரும்பவில்லை என்றால் 1 கோடி பறிமுதல் செய்யப்படும்” என தெரிவித்தார். வெளிநாடு சென்று மீண்டும் இந்தியா வர வேண்டும் எனக்கூறி, விசாரணையில் ஆஜராக வேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகளை விதித்து நீதிபதி இந்த அனுமதியை அளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com